158 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டறியப்பட்ட அரிய மலர்

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில், 158 ஆண்டுகளுக்கு பிறகு 'சயானந்தஸ் ஹூக்கேரி' என்ற அரிய மலர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. காம்பானுலேசி குடும்பத்தை சேர்ந்த இம்மலர், 3,600 மீட்டர் உயரத்தில் காணப்படுவதால், இதன் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இதனை 'அருகிவரும் இனம்' என வகைப்படுத்த இந்திய தாவரவியல் ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது. 1867-ல் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட இந்த மலர், இமயமலை பகுதிகளில் அரிதான தாவரமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி