அசாம் மாநிலத்தில் உள்ள லோகோவா வனவிலங்கு சரணாலயத்தில் 'ஸ்மேவ்' எனப்படும் அரியவகை வலசைபோகும் வாத்து முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அனாடிடே குடும்பத்தை சேர்ந்த இந்த வாத்துகள், வட யூரேசியாவில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் பனிக்கட்டியற்ற நீர்நிலைகளை நோக்கி தெற்கு பகுதிக்கு வலசைபோகின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் செந்நிற பட்டியலில் 'தீவாய்ப்பு குறைந்த' இனமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.