உ.பி.யில் உள்ள சீதாபூர் மருத்துவமனையில் திங்கள்கிழமை ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இரண்டு முகம், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தையின் ஒரு உடல் வளர்ச்சியடைந்தாலும் மற்றொன்று வளர்ச்சியடையவில்லை. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்து 5 மணி நேரத்திற்குள் இறந்தது. இதனால் தாயாருடன் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கினர்.