ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்.. பெண் போலீசில் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், கடந்த ஆண்டு அஜித்குமார் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, தனக்கு பிறந்தநாள் என கூறிய அஜித்குமார், அப்பெண்ணை உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரில் அஜித் மீது போலீசார் வழக்குப்பதிந்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது அந்தரங்க வீடியோவை வைத்து அவர் மிரட்டுவதாகவும் அப்பெண் டிஜிபி அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி