ரஞ்சி கோப்பை அரையிறுதியில் உத்தரகாண்ட் அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி, கர்நாடக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல் இன்னிங்சில் 736 ரன்கள் குவித்த கர்நாடகா, 763 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து, வரும் 24-ஆம் தேதி ஹூப்ளியில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கர்நாடக அணி, ஜம்மு காஷ்மீருடன் பலப்பரீட்சை நடத்துகிறது.