ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மீனவ விசைப்படகு மூழ்கிய சம்பவத்தில், உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் வழக்குப்பதிவு இன்றி தமிழ்நாடு திரும்பும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.