சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளான இன்று (செப்.14) முCM விஜய் தனது 'X' தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் உரிமைகளுக்காக களம்கண்டு கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய பணிகள் தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்நாளில் ராமசாமி படையாச்சியார் ஆற்றிய மகத்தான மக்கள் நலப்பணிகளையும் தியாகங்களையும் போற்றி நினைவுகூர்வதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.