இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தொண்டி காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்சிராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மின்சார கம்பிகள் சேதமடைந்து பல நாட்களாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி பலியானதால் குடும்பத்தாரும், கிராமத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்