தொண்டி அருகே மோர் பண்ணை கடற்கரை கிராமத்தில் அருள்மிகு ரணபத்திர காளியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு 15க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்ற படகுப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற படகுகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. படகுகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்தப் போட்டியை ரசித்து மகிழ்ந்தனர்.