திருவாடானை தாலுகா, தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் நாட்டுப் படகை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவில், சிறுவன் நடுக்கடலில் படகை வேகமாகச் செலுத்தும் போது நிலைதடுமாறி விழுந்து, பின்னர் எழுந்து படகை கட்டுப்படுத்துகிறான். பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை இது போன்ற ஆபத்தான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்துவது வேதனை அளிப்பதாகக் கூறப்படுகிறது.