திருவாடானை அருகே நகரிக்காத்தான் கிராமத்தில், சதீஷ்குமார் (33) என்பவர் வெள்ளிக்கிழமை மாலை வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, அவரைத் தடுத்த தாய் பிச்சையம்மாளை கத்தியால் தாக்கினார். தடுக்க வந்த தந்தை கண்ணனையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த இருவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.