திருவாடானை: இடி, மின்னலுடன் பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே. மங்கலம், பாரதி நகர், கல்லூரி, தோட்டாமங்கலம், செலுங்கை, மேல்பனையூர், கீழ்பனையூர், சனவேலி, ஆர்.எஸ். மங்கலம், இந்திரா நகர், மங்கலம், அச்சங்குடி, கடம்பாகுடி, இதைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்தது. 

இந்நிலையில், புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவியது. இந்த மழை கோடை உழவுக்கு ஏற்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி