ராமநாதபுரம்: சிறப்பாக நடைபெற்ற பெரிய கோயில் சப்தாவர்ண விழா

திருவாடானையில் பெரிய கோயில் சப்தாவர்ண விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்து சென்றனர். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. 

இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த மே 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வந்தது. ஒன்பதாவது நாள் திருவிழாவாக இரண்டு தேர்கள் ஓடும் தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சப்தாவர்ண நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது ஆயிரம் வைசிய மஞ்சள பூத்தார் மகாஜனசபை சார்பில் நூறாவது ஆண்டு விழா கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்த சப்தாவர்ண விழாவில் மாலை பஞ்சமூர்த்திகள் மங்கள நாதஸ்வர மேளக்கச்சேரியுடன் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி