ராமநாதபுரம்: தனியார் பள்ளி 41ம் ஆண்டு வைரவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராஜன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் ராஜன் நர்சரி & பிரைமரி பள்ளி 41வது ஆண்டு விழா விமர்சையாக நடந்தது. விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 

இந்நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கண்ணன், மதுரை மருத்துவர் பாண்டியன், அண்ணாமலை தெரசா மகளிர் பல்கலைக்கழக தலைமை இயக்குநர் மீனாபிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். மேலும் விழாவை சிறப்பிக்க திருவாடானை தாசில்தார் ஆண்டி, துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

சின்னகீரமங்கலம் பங்குத் தந்தை சேவியர் சத்தியமூர்த்தி, பெரியாளார் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வரவேற்புரையாக பள்ளியின் தாளாளர் அருள் நிர்மலாசெல்வராஜ், ராஜன் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் ஆண்டறிக்கையை முதல்வர் சசிகலா வாசித்தார். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றியுரை வழங்கினார். 

முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்வித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி