ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில், திருவிழா கடந்த மே 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி