ராமநாதபுரம்: அடிக்கடி பழுதாகும் பேருந்தை மாற்ற  வேண்டுமென வேண்டுகோள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து கள்ளிக்குடி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தடம் எண் 19 அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பழுதாகுவதும் அதை சரிசெய்வதுமாக இருந்துவந்த நிலையில், இன்று காலை பயணிகள், மாணவர்கள் ஏறி அமர்ந்த நிலையில் பிரேக் ஃபெயிலியர் என சொல்லப்படுகிறது. 

ஓட்டுனர் இரவு பேருந்து நிறுத்தும் போழுது அதற்குரிய ஆவணத்தில் எழுதி வைத்ததாகவும் காலையில் சரிசெய்ததாக சொல்லப்பட்டுவந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து எடுத்தபோழுது பேருந்து பிரேக் ஃபெயிலியர் ஆனது என பயணிகள், மாணவர்கள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினார்கள். எட்டு மணிக்குச் செல்லவேண்டிய அரசுபேருந்து நேரத்துக்குச் செல்லாததால் மாற்றுபேருந்து எட்டு மணி 34 நிமிடத்துக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பயணிகளை அனுப்பிவைத்தனர். 

இதனால் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுத்ததுடன் அடிக்கடி பழுதாகும் அரசுபேருந்திற்கு மாற்றுபேருந்து வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி