வீரசங்கிலி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று (பிப்ரவரி 20) ராமநாதபுரம் நோக்கிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.