ராமநாதபுரம்: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே கோலியார்கோட்டை பகுதியில் ஒரு வாரகாலத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குறைகூறி வந்த நிலையில், இதுகுறித்து மின்வாரியத்துறையிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்கள் பெண்களால் ஆர் எஸ் மங்கலம் மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சம்பவம் அறிந்து வந்த ஆர் எஸ் மங்கலம் காவல்துறையினர் கலைந்துசெல்லவில்லை என்றால் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைக்கப்படும் என தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது. மின்தடை ஏற்பட்டதால் கேட்க வந்தவர்களை அடிப்பதாக கூறிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர் எஸ் மங்களம் தாலுகா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலை வந்தது. ஆர் எஸ் மங்கலத்தில் பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. தனுஷ்குமார், ஐபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர். இதனால் இங்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலை நிலவியது.

தொடர்புடைய செய்தி