இந்த ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும், ஏற்கனவே ஓய்வூதியம் பற்றி கடந்த ஆட்சியாளர்கள் குழு அமைத்ததால் எவ்வித முன்னேற்றமும் இல்லை,
இந்நிலையில் இந்த அரசும் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர். ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து வந்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனை முன்பாக நிறுத்தினர். அதனால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளானர்.