தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து குறைந்ததால் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, எம். ஆர். பட்டினம், பாசிபட்டினம், எஸ். பி. பட்டினம் ஆகிய பகுதிகளில் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, காளையார்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 400-க்கு விற்ற விலை மீன் ரூ. 600-க்கும், ரூ. 400-க்கு விற்ற பாறை மீன் ரூ. 600-க்கும், ரூ. 450-க்கு விற்ற முரல் ரூ. 650-க்கும், கிலோ ரூ. 400-க்கு விற்ற மீன் ரூ. 800-க்கும் விற்பனையாகின்றன.

தொடர்புடைய செய்தி