திருவாடானை: குருத்தோலை ஞாயிறு விழா

திருவாடனை அருகே உள்ள ஓரியூர் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் திருத்தலத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களால் அனுசரிக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரமாகிய இன்று புனித வாரத்தின் தொடக்கமாகவும் நுழைவு வாயிலாகவும் குருத்தோலை ஞாயிறு அமைகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு பவனியானது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலத்தில் இன்று கொண்டாடப்பட்டது. 

இந்த பவனியானது கோவில் அருகில் உள்ள புனித லெவே அடிகளார் கெபியில் தொடங்கி வீதிகளின் வழியாக குருக்கள் அனைவரும் முன் செல்ல அவர்களைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் குருத்தோலைகளை கைகளில் உயர்த்திப் பிடித்து தாவீது மகனுக்கு ஓசான்னா என்ற ஆரவார முழக்கத்தோடு பாடல்களை பாடிக்கொண்டு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்த வண்ணமாய் ஆலயத்திற்குள் பவனியாக சென்று நுழைந்தனர். அதைத்தொடர்ந்து பங்குத்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை அவர்களின் தலைமையில் அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி