ராமநாதபுரம்: கண்மாயில் குளித்த மூதாட்டியிடம் 7 பவன் சங்கிலி பறிப்பு

ஆர் எஸ் மங்கலம் தாலுகா செட்டியகோட்டை பகுதியில், கண்மாயில் குளித்துவிட்டு வந்த மூதாட்டி சச்சிதானந்தத்தின் கழுத்தில் இருந்த 7 பவன் தங்கச் சங்கிலியை இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வழி கேட்பது போல் நடித்து பறித்துச் சென்றனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டியை மீட்ட பொதுமக்கள் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் பொழுதிலேயே நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி