ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சினேகவல்லி உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இத்தலத்தில் சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டதாகப் புராண வரலாறு கூறுகிறது. இதன் அடையாளமாக, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவில் நான்கு கால பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.