ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்களநாதன் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் லட்சார்ச்சனை சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அய்யன் அருள் பெற்றுச் சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.