திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்பதாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், விசுவல் கம்யூனிகேசன், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் பழனியப்பன் தலைமையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் புதிய பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி விழாவுரை ஆற்றினார். கல்லூரியில் பயின்ற 220 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கணித துறை பேராசிரியர் முனைவர் செல்வம், ஆங்கிலத்துறை பேராசிரியர் மணிமேகலை மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.