திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரான முத்துமனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக, கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!