திருவாடானையில் பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு மீட்புப் பணி

திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீ விபத்துகளைக் கையாள்வது குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு வகையான தீயணைப்புக் கருவிகளை முறையாகக் கையாள்வது குறித்தும் விரிவான செயல்விளக்கம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி