திருவாடானை: அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் திருவிழா வீரன் வேடமிட்ட பக்தர்கள் வீதி உலா வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வடக்கு கிழக்குத் தெருவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு தர்மராஜர், அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிகுந்த கோவிலாகும். மகாபாரத கதையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டதாகும். 

இக்கோவிலுக்கு கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கும் ஐயனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று மகாபாரத கதையை நினைவூட்டும் வகையில் பக்தர்கள் விரதம் இருந்து பீமன் வேடமிட்டு வீதி உலா வந்தனர். உடன் சிறுவர்கள் பலர் வேடமிட்டு உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவமும், அதனைத் தொடர்ந்து பூக்குழி இறங்குதல், காளி வேடம், எரி சோறு விடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி