ராமநாதபுரம்: பிப்.25 ஆம் தேதி சமையல் எரிவாயு குறைதீா் முகாம்

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் முகாம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் முகாம் வருகிற 25-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான தங்களது குறைகள், கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம். இதில் எரிவாயு முகவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகள் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி