ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரதி நகரில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின் கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் தப்பிச் சென்றது. தப்பிச் செல்லும் வழியில் திருவாடானை பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த நாய் ஒன்றின் மீதும் அந்த வாகனம் மோதியதில், நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.