ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சந்தைப்பேட்டை அருகே மாட்டுவண்டி பந்தயம் அதிமுக சார்பில் விமர்சையாக நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில நிர்வாகி ஆணிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு வகையாக நடைபெற்றது. இதில் சிறிய மாட்டில் 11 மாட்டுவண்டிகள், பெரிய மாட்டில் 28 வண்டிகளும் கலந்துகொண்டன. போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல சீறிப்பாய்ந்தது அதை சாலையோரம் நெடுகிலும் மக்கள் குழுமி இருந்து கண்டு ஆரவாரம் செய்தனர்.
வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டார்கள்.