தொண்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கரை ஒதுங்கியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை தாலுகா, தொண்டி கிறிஸ்தவ ஆலயத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் இன்று பொதுமக்கள் சென்றபோது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தொண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி