அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற மையப்பொருளில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திருவாடானை பகுதிக்கு வந்த அவரை மண்டபம் பாஜக மேற்கு ஒன்றியம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்தே மாதரம் என்ற கோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.