ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நம்புதாளை பகுதி மேற்கு தெருவைதெருவைச் சேர்ந்த முகமது நபின். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே மீன் ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் தொண்டி காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து உடலைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிணக்கூறு ஆய்வு செய்ய மருத்துவர்கள் இல்லாததால் நாளைதான் பிணக் கூறாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.