திருவாடானை அருகே விஷ குழவிகள் கடித்ததில் பள்ளி மாணவிகள் உட்பட ஆறு பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் பலருக்கு விஷ குழவிகள் கடித்ததில் மயக்க நிலைக்கு வந்ததை அடுத்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி குழந்தைகள் இருவருக்கும் கடித்துள்ளது. அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் செங்கமடையைச் சேர்ந்த ஆனந்த (32), பரமேஸ்வரி (42), 3ம் வகுப்பு படித்து வரும் இரு சிறுமியர்கள் உட்பட 6 பேருக்கு விஷ குழவி கடித்துள்ளது. தற்போது அனைவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.