தகவல் அறிந்த சிவபுரிபட்டி ஊராட்சியைச் சேர்ந்த கோவில்பட்டி, குமரத்தகுடிபட்டி, மட்டிக்கரைப்பட்டி, மணப்பட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று ஒன்று கூடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு கிராம ஊராட்சியே போதுமானது, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் எங்கள் பகுதி மக்கள் 100 நாள் வேலை திட்டம் நம்பி வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சியாக மாறும் பொழுது எங்களுக்கு அந்த வேலை கிடைக்காது. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் ஆகவே எங்கள் ஊராட்சியை ஊராட்சியாகவே தொடர வேண்டுமென கோரிக்கையுடன் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியில் இருந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மாரீஸ்வரனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.