சிவகங்கை: பறந்த 3 லட்சம் தேங்காய்கள் (VIDEO)

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் ஒன்பதாம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.தேர் நான்கு ரத வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் தங்களது நேர்த்திகடனாக 101, 201 501, 1001 என பக்தர்கள் தேங்காய் உடைத்தும், குழந்தை வரம் வேண்டியவர்கள், நோய் குணமடைய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனுக்காக காணிக்கையாக 3 லட்சம் தேங்காய்களை தேரடிப் பணிகளில் வீசி எறிந்து உடைத்தனர். 

சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் தேங்காய்களை சேகரித்தனர். அப்போது சிலர் தங்களுடைய தலையை பாதுகாக்க ஹெல்மெட்டும் உடல் அடிபடாமல் இருக்க பான்ச் கட்டிக் கொண்டனர். தேங்காய்களை உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணி நேரம் தேரடிப் படியில் எதிரொலித்தது.இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவை கண்டு கழித்தனர்.

தொடர்புடைய செய்தி