சிவகங்கை 48 காலனி அருகே உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கமலா (35). கமலா தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் தன்னை அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் தொந்தரவு தருவதாகவும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் கமலாவை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.