சிவகங்கை: மனைவியை கொலை செய்த கணவர்: ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கீழ வளையம் பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (31). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீவித்யா(27). செல்வகுமார் வீடு கட்டுவதற்காக ரூ. பத்து லட்சம் வாங்கி வரும் படி கேட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவித்யா அணிந்திருந்த உடையில் செல்வக்குமார் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீவித்யா மருத்துவமனையில் இறந்து போனார். 

இது தொடர்பாக காளையார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார், அவரது தந்தை வேலுச்சாமி, தாயார் வள்ளி, அக்கா கோகிலா, உறவினர் சுதா ஆகிய ஐந்து பேர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது வேலுச்சாமி இறந்து போனார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.21,000 அபராதமும் விதித்தார். 

மேலும் தாயார் வள்ளிக்கு இரண்டு வருட சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும், அக்கா கோகிலாவிற்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தார். மேலும் சுதாவை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக ஸ்ரீவித்யாவின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி