நேற்று(செப்.12) வழக்கம் போல் இரவு யானை கட்டி போட்டிருந்த நிலையில் இருந்தபோது யானைக்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் குடையில் மின் கசிவு காரணமாக தீ பற்றி யானை சுப்புலட்சுமி தீக்காயம் அடைந்து. இரவில் யானையின் பிளிரல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைத்தனர்.
காயமடைந்த யானை சுப்புலட்சுமிக்கு மறைவான இடத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ விபத்து எவ்வாறு நடைபெற்றது என சம்பவ இடத்தை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் யானை சுப்புலட்சுமி காயமடைந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதி மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.