இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகரில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் எழுச்சியான இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமேஸ்வரம் நகர் செயலாளர் சி. ஆர். செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சிப் பாகுபாடின்றி பல்வேறு இயக்கங்களின் முன்னணியினர் கலந்துகொண்டு மறைந்த தலைவருக்கு இரங்கல் உரையாற்றினர்.