ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள அம்மா பூங்கா எதிராக உள்ள சேதுபதி நகர் 1வது தெரு நுழைவாயிலில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. அதன் அருகே குடிநீர் கிணறு ஒன்றும் உள்ளது. இந்த குடிநீர் கிணற்றில் மூட்டை மூட்டையாக பல்லாயிரக்கணக்கான ஆணுறைகள் கொட்டப்பட்டுள்ளது. ஆணுறைகள் கொட்டப்பட்டு இருப்பதால் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் இவ்வளவு ஆணுறைகள் எங்கிருந்து வந்து கொட்டப்பட்டது, இங்கே கொட்டுவதற்கான அவசியம் என்ன என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டி அருகே இவற்றை கொட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.