ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் முறையான பாதாள சாக்கடை வசதி இல்லாததால், வீடு மற்றும் தனியார் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தினந்தோறும் கடலில் கலக்கிறது. இதனால் கடல் மற்றும் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த அவல நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.