ராமநாதபுரம் செட்டியார் தெரு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெண்கள் கும்மியாட்டம், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். சிறுவர் முதல் பெரியவர் வரை பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.