ராமநாதபுரம்: 310 கிலோ கஞ்சா பறிமுதல்; பரபரப்பு

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை பருத்தித்துறை கடல் கரை பகுதியில் கடல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா. இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினர் பறிமுதல் செய்தனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினர், கரையோர பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தும்பளை மூர்க்கன் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த படகை கடல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 310 கிலோ கஞ்சாவை கடல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பருத்தித்துறை போலீசார் வழக்குப் பதிந்து, இதைக் கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி