ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து ஆக. 10, 17, 24, 31 (ஞாயிறு) இரவு 10 மணிக்குப் புறப்பட்டு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, கரூர், சேலம், நாமக்கல் வழியாக திங்கள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி செல்லும். ஹூப்ளியில் ஆக. 9. 16, 23, 30 (சனிக்கிழமை) காலை 6.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும்.