இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் இக்கோவிலின் அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோயிலாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் நேற்று (பிப்.9) கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து காட்டுப்பரமக்குடி கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்