பரமக்குடி: 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது

பரமக்குடி அருகே முதியோர் உதவித்தொகை பெற மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன நாகாச்சி கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அம்பேத்ராணி (42). சின்ன நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார். 

அவரது விண்ணப்பத்தை பரிந்துரை செய்வதற்கு ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக உதவியாளர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் கிராம நிர்வாக உதவியாளர் லஞ்சம் கேட்பதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 3000 ரூபாய் நோட்டுக்களை லஞ்சமாக கிராம நிர்வாக உதவியாளருக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

அப்போது ரூபாய் 3 ஆயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கிய போது கையிலிருந்து களவுமாக கிராம நிர்வாக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் அம்பேத்ராணியிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி