ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனாரின் மணிமண்டபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன் தலைமையில் நிர்வாகிகள், அவரது திருவுருவச் சிலை மற்றும் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பரமக்குடி, திருச்சூழி சட்டமன்றத் தொகுதிக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட மண்டலத் துணைச் செயலாளர் ரமேஷ் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.