இதுகுறித்து வேலைக்காரப் பெண் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து பரமக்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் உயிரிழந்த மூதாட்டி ஞானசௌந்தரியின் வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி அணிந்திருந்த செயின், தோடு என ஏழரைச் சவரன் நகை மாயமாகியுள்ளது. இதுகுறித்து வேலைக்காரப் பெண் அன்னலட்சுமியிடம் பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கைரேகைப் பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.